உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மையத்தடுப்பை தாண்டி பஸ் மீது மோதிய கார்

மையத்தடுப்பை தாண்டி பஸ் மீது மோதிய கார்

அனுப்பர்பாளையம்; திருப்பூர், அவிநாசி ரோட்டில் நேற்று காலை அதிவேகமாக சென்ற கார் ஒன்று அம்மாபாளையம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து மையத்தடுப்பை தாண்டி ரோட்டின் மறுபக்கம் சென்றது.அப்போது, கோவையில் இருந்து அவிநாசி வழியே திருப்பூர் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது மோதி விபத்தானது. கார் மோதியதில் பஸ்ஸின் பின் பக்க டயர் கழன்று ஓடியது. விபத்தில் காரை அதிவேகமாக ஓட்டி வந்த ஊத்துக்குளி ரோடு - பாரப்பாளையத்தை சேர்ந்த கரன்சிங் படேல், 45, படுகாயம் அடைந்தார். அவரை அருகிலிருந்தோர் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை