உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில் வளர்ச்சி பயிலரங்கம் 

தொழில் வளர்ச்சி பயிலரங்கம் 

திருப்பூர்; 'தொடர் வணிக வெற்றி' என்ற தலைப்பில், தொழிற்துறையினர் பயன்பெறும் வகையில், தொழில் வளர்ச்சி குறித்த ஒரு நாள் பயிலரங்கம் இன்று திருப்பூரில் நடக்கிறது. தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், ஸ்ரீராம்சந்த்ர மிஷன் மையத்தில் இப்பயிலரங்கம் மாலை 5:00 முதல் 7:00 மணி வரை நடைபெறும். சென்னை 'ஸீ சேஞ்ச்' கன்சல்ட்டிங் நிறுவனர் பிரகாஷ் பயிற்சி அளிக்கிறார். இப்பயிலரங்கில், சவால்களை சமாளித்து, அமைதி, மகிழ்ச்சி, பொருளாதார வளர்ச்சி என தொடர் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். இப்பயிற்சி முற்றிலும் இலவசம். எனவே, ஆர்வமுள்ள தொழில்முனைவோர் இதில் பங்கேற்று பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்