உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடைக்கு முன் அம்மை நோய்; கால்நடை விவசாயிகள் அச்சம்

கோடைக்கு முன் அம்மை நோய்; கால்நடை விவசாயிகள் அச்சம்

பல்லடம்; கோடை காலம் துவங்குவதற்கு முன்பாகவே, கால்நடைகளை அம்மை நோய் தாக்கி வருவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.விவசாயிகள், வருவாயை பெருக்கும் நோக்கில், விவசாயத் தொழிலுடன், கால்நடை வளர்ப்பு தொழிலையும் செய்து வருகின்றனர். பால் உற்பத்தி மூலம் தங்களது வருவாயை பெருக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர். இச்சூழலில், கால்நடைகளை பாதிக்கும் பல்வேறு நோய்கள் மற்றும்உடல் உபாதைகள் காரணமாக, விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இவ்வகையில், ஆண்டுதோறும் கோடை காலங்களில் கால்நடைகளை தாக்கும் அம்மை நோய் விவசாயிகளை பெரிதும் அச்சுறுத்துகிறது.கோடைக்காலம் துவங்குவதற்கு இன்னும் ஓரிரு மாதம் உள்ள நிலையில், கோடைக்கு முன்பாகவே அம்மை நோய் தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.சுல்தான்பேட்டை பகுதி விவசாயி கனகராஜ் கூறுகையில், 'வழக்கமாக கோடைக்காலத்தில்தான் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்படும். கடந்த ஆண்டு, எண்ணற்ற கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகின.தற்போது, கோடைக்காலம் துவங்கும் முன்பாகவே, அம்மை நோய் பாதிப்பு துவங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது. 15க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்த்து வரும் நிலையில், பசு மாடு ஒன்றுக்கு மிக கடுமையான அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மஞ்சள், வேப்பிலை என, பல்வேறு நாட்டு வைத்தியம் மட்டுமின்றி, கால்நடைத்துறை துறை மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கால்நடை துறை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ