சென்சுரி பவுண்டேஷன் பள்ளி விளையாட்டு விழா கோலாகலம்
திருப்பூர்; திருப்பூர், ராக்கியாபாளையத்தில் உள்ள சென்சுரி பவுண்டேஷன் பப்ளிக் பள்ளியில், 8வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் மாயா வினோத், வரவேற்றார். சென்சுரி பள்ளிக் குழுமத்தின் அறங்காவலர் மனோகரன், கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். மாணவ, மாணவியரின் அணிவகுப்பு, தடகளம், ஓடுதல், குண்டெறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் சிலம்பம், நடன நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பள்ளி தாளாளர் சக்திதேவி, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி, வாழ்த்தி பேசினார். விளையாட்டு போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற சிறுத்தை அணியினருக்கு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. விழாவில், பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.