குழந்தைகள் பாதுகாப்பு பூண்டியில் குழு கூட்டம்
அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.நகராட்சி தலைவர் குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், குழந்தை திருமணம் உள்ளிட்ட புகார்களுக்கு 1098ல் அழைத்து புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.குழந்தைகள் உதவி மைய ஆற்றுப்படுத்துனர் வரதராஜன், குழந்தைகள், சிறுவர்கள், பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர் பற்றி புகாரளிக்க, 1098- என்ற இலவச போன் அழைப்பின் முக்கியத்துவம் குறித்து கூட்டத்தில் பேசினார்.தலைமையாசிரியர்கள் லீலாவதி (பூண்டி), வசந்தி (அணைப்புதுார்), ராமகிருஷ்ணன் (அம்மாபாளையம்), நிர்மலா (தேவராயன்பாளையம்), ஆரம்ப சுகாதார நிலைய பகுதி நேர செவிலியர் அன்னம், சுகாதார ஆய்வாளர் யோகேஷ் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.