உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தைகள் தின நடைபயணம்

குழந்தைகள் தின நடைபயணம்

திருப்பூர்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, 'வாக் பார் சில்ட்ரன்ஸ்' நடைபயணம், திருப்பூரில் வரும், 14ம் தேதி நடைபெறுகிறது. கலெக்டர் அலுவலகத்திலிருந்து துவங்கும் நடைபயணம், பல்லடம் ரோட்டில், தென்னம்பாளையம் வரை சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை வந்தடையும். தொடர்ந்து, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்ைதகள் உரிமைகள், குழந்தைகள் நலத்திட்டங்களை விளக்கும்வகையில், நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளுக்கான நடைபயணத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம் என, கலெக்டர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ