உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிறிஸ்துமஸ் பண்டிகை; மாவட்டத்தில் கோலாகலம்

கிறிஸ்துமஸ் பண்டிகை; மாவட்டத்தில் கோலாகலம்

திருப்பூர்; கிறிஸ்துமஸ் பண்டிகை யையொட்டி, திருப்பூர் மாநகரம், புறநகரில் உள்ள சர்ச்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள், கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, திருப்பூர் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள சர்ச்களில் நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு மாட்டுத் தொழுவத்தின் தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்ட குடில் அலங்காரத்தில் குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைத்த பின், பங்கு குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர்.திருப்பூர், குமரன் ரோட்டில் உள்ள புனித கத்ரீனம்மாள் சர்ச், கோர்ட் வீதியில் உள்ள டி.இ.எல்.சி., அருள்நாதர் சர்ச், சி.எஸ்.ஐ., துாய பவுல் ஆலயம், குமார் நகரில் உள்ள புனித சூசையப்பர் சர்ச், சி.எஸ்.ஐ., துாய லுாக் சர்ச் உட்பட மாவட்டத்தின் அனைத்து சர்ச்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !