உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிமகன்கள் தொல்லை; போலீசார் கண்காணிக்கணும்

குடிமகன்கள் தொல்லை; போலீசார் கண்காணிக்கணும்

உடுமலை; உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, 'குடி'மகன்கள் தொல்லை அதிகரிப்பதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.உடுமலை தளி ரோடு மேம்பாலம் அருகே உள்ள, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர்.பள்ளியின் அருகே மேம்பாலத்தின் கீழ் திறந்த வெளியாகவும், குப்பைக்கழிவுகள் குவிந்தும் உள்ளன. மாலை நேரங்களில் இந்த பகுதியை 'குடி'மகன்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.பள்ளியின் சுற்றுப்பகுதியில் குடியிருப்புகளும் உள்ளன. இரவு நேரங்களில் பொதுமக்களும் அவ்வழியாகச்சென்று வருவதற்கு அச்சப்படுகின்றனர்.இவ்வாறு 'குடி'மகன்கள் தொல்லை அதிகரிப்பதால், பள்ளி மாணவியரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. போலீசார் அப்பகுதியில் சிறப்பு ரோந்து சென்று கண்காணிக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை