உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவில் இன்ஜினியர்ஸ் சங்கநிர்வாகிகள் பதவியேற்பு

சிவில் இன்ஜினியர்ஸ் சங்கநிர்வாகிகள் பதவியேற்பு

திருப்பூர் : திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.வித்யா கார்த்திக் மண்டபத்தில் நடந்த விழாவுக்கு அதன் தலைவர் அருண் ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ஜார்ஜ் லியோ ஆனந்த் வரவேற்றார். முன்னாள் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். நடப்பாண்டு நிர்வாகிகளாக தலைவர் குமார் சண்முகம்; செயலாளர் ராஜசேகரன்; பொருளாளர் சதீஷ்பாபு; துணை தலைவர் ராதாகிருஷ்ணன்; துணை செயலாளர் சரவணகுமார், உடனடி முன்னாள் தலைவர் அருண் ரமேஷ் ஆகியோர் பதவியேற்றனர். மேலும் நிர்வாக குழு உறுப்பினர்கள் 22 பேர் பொறுப்பேற்றனர். கூட்டமைப்பு மாநில தலைவர் விஜயாபானு, முன்னாள் தலைவர் தில்லைராஜன், பட்டயத் தலைவர் சிதம்பரம் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், கட்டுனர் சங்க முன்னாள் மாநில தலைவர் பழனிவேல், செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மண்டல தலைவர் ஸ்டாலின் பாரதி மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை