மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
02-Sep-2025
உடுமலை; உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தின் சார்பில், ஆனைமலை புலிகள் காப்பகம் ஏழுமலையான் கோவில் பகுதிகளில் துாய்மைப்பணிகள் நடந்தது. உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம், நியூ ராயல் அரிமா சங்கம், தேஜஸ் ரோட்டரி மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், ஆனைமலை புலிகம் காப்பகம் உடுமலை வனசரக்கத்திற்குட்பட்ட ஏழுமலையான் கோவில் பகுதிகளில் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. அப்போது பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில், துாய்மைப்பணிகள் நடந்தது. உடுமலை சுற்றுச்சூழல் சங்க பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள், பல்வேறு சங்கத்தினர் துாய்மைப்பணிகளில் ஈடுபட்டனர். சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருப்பதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
02-Sep-2025