மேலும் செய்திகள்
'போதை இல்லா தமிழகம்' மாணவர்கள் உறுதிமொழி
01-Sep-2024
திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரிஎன்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் அதன் தத்தெடுப்பு கிராமமான கருமாபாளையத்தில் 'துாய்மையே சேவை' திட்டத்தின் கீழ், வீடு, வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.மாணவ பிரதிநிதி மதுகார்த்திக், முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஊராட்சி துணைத் தலை வர் சண்முகசுந்தரம், ''துாய்மைப்பணி என்பது வீடுகளில் இருந்து துவங்க வேண்டும்'' என்றார்.பின், மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தீபன் சந்தோஷ், லட்சுமிகாந்த் ஆகியோர் தலைமையில், மாணவ, மாணவியர் வீடு, வீடாக சென்று, துாய்மையின் அவசியம் வலியுறுத்தும் துண்டு பிரசுரம் வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலகு 2 திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் செய்திருந்தார்.
01-Sep-2024