உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  காலை முதல் மேகமூட்டம்: மதியத்தில் இருந்து மழை

 காலை முதல் மேகமூட்டம்: மதியத்தில் இருந்து மழை

திருப்பூர்: காலை முதல் மேகமூட்டம்; மதியத்தில் இருந்து மழைப்பொழிவால், திருப்பூரின் காலநிலை நேற்று குளுகுளுவென மாறியது. மழையால் சாலையோர கடைகளில் வர்த்தகம் மந்த மானது. மாவட்டத்தில் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்கு பருவம் துவங்கிய பிறகும், திருப்பூர், பல்லடம், அவிநாசி பகுதிகளில், பருவமழை இயல்பான அளவு கூட பெய்யவில்லை; வெயில் தாக்கம் குறைவாக இருந்தாலும், மழை பெய்யாததால், மானாவாரி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். கால்நடைகள் தீவன பயன்பாட்டுக்காக, கடந்த மாதம் விதைத்த சோளம் முளைத்து வந்த நிலையில், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மழை கிடைக்கவில்லை. சில நாட்களாக, அதிகாலை நேரத்தில், லேசான துாறல் மழை பெய்து நனைத்தது. நேற்று மதியத்தில் இருந்து, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், சோளப்பயிர்கள் உயிர்பிடிக்கும் என, விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். திருப்பூரை பொறுத்தவரை, வடமாநில தொழிலாளர்கள் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில், 'ஷாப்பிங்' செய்வது வழக்கத்தில் உள்ளது; காலை முதல் மதியம் வரை; மாலை துவங்கி இரவு வரை, ரோட்டோர கடைகளில் பொருட்களை வாங்குவது வழக்கம். அதற்காகவே, பனியன் ஆடைகள், காலணிகள், குடைகள், வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள், பெல்ட், பர்ஸ், கடிகாரம், பழவகைகள், காய்கறி கடைகள், பருத்திப்பால், உணவு பண்டங்கள் விற்பனைக்கென ரோட்டோரக் கடைகள் முளைக்கும். நேற்று மதியத்திற்கு பின் மழை பெய்ததால் ரோட்டோர கடைகளில் விற்பனையில்லை. காதர்பேட்டை பகுதியிலும் ஆடை விற்பனை விற்பனை மந்தமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை