மேலும் செய்திகள்
ஒழுங்கு முறை கூடத்தில் தேங்காய் ஏலம்
15-Oct-2025
விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
05-Nov-2025
உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ.67.50க்கு விற்பனையானது. மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 1,582 கிலோ எடையுள்ள, 3,504 தேங்காய்களை, 16 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஆறு வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ.67.50க்கும்,குறைந்த பட்சமாக, ரூ.60 என சராசரியாக, ரூ.64க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ரூ.ஒரு லட்சத்து, ஆயிரத்து, 587 ஆகும். அதே போல், தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 9 விவசாயிகள், 9 மூட்டை அளவுள்ள, 275.650 கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர். இதில், ஆறு வியாபாரிகள் பங்கேற்று, தரத்திற்கு ஏற்ப, அதிக பட்சமாக, கிலோ ரூ.240க்கும், குறைந்த பட்ச விலையாக, ரூ.190 என, சராசரியாக, ரூ.227க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 56 ஆயிரத்து, 964ஆகும், என ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
15-Oct-2025
05-Nov-2025