விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் கிலோவுக்கு, அதிகபட்சமாக, ரூ. 69.50 விலை கிடைத்தது. மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் தேங்காய், கொப்பரை ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில், 3,204 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ.69.50க்கும், குறைந்தபட்சமாக 64 ரூபாய்க்கும் விற்பனையானது. ஏலத்துக்கு 5 கொப்பரை மூட்டைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகபட்சமாக கொப்பரை கிலோ 220 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 170 ரூபாய்க்கும் விற்பனையானது.