உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.3 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

ரூ.3 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

வெள்ளகோவில்: முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடக்கிறது. அதன்படி நடந்த கொப்பரை ஏலத்தில், 26 மூட்டையில், 603 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக கிலோ, 218.70 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 70.20 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 603 கிலோ கொப்பரை, ஒரு லட்சத்து, 14 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. 23 விவசாயிகள் பங்கேற்றனர். மேலும், தேங்காய் ஏலத்தில், 46 பேர் நேற்று விற்பனை கூடத்துக்கு, 12,591 தேங்காய் கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் கிலோ, 68.65 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 42.30 ரூபாய்க்கும், சராசரி, 60.35 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 3 லட்சத்து, 6 ஆயிரத்து, 283 ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி