உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவை - ராமேஸ்வரம் ரயில் மே மாதம் வரை ஹவுஸ்புல்

கோவை - ராமேஸ்வரம் ரயில் மே மாதம் வரை ஹவுஸ்புல்

திருப்பூர்: ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை, கடந்த 6ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து, ரயில் இயக்கத்தை மீண்டும் துவக்கி வைத்தார்.கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாக ராமேஸ்வரத்துக்கு, கடந்த 8ம் தேதி முதல் வாராந்திர ரயில் இயக்கம் துவங்கியது. ரயிலில் இரண்டு பொது பெட்டி, ஒன்பது படுக்கை வசதி, இரண்டு ஏ.சி., உட்பட ஏழு முன்பதிவு உட்பட, 21 பெட்டிகள் உள்ளன.ரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், 'கோவையில் இருந்து புறப்படும் ரயில் ராமேஸ்வரம் செல்வதை அறிந்து, பலரும் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். 1,129 இடங்களில், 95 சதவீத இடங்கள் பூர்த்தியாகி விடுகிறது.மே, கடைசி வாரம் வரையிலான டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. ரயில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக இயங்கினாலும், கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து டிக்கெட் முன்பதிவு அதிகமாக உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ