உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவை - பரூனி ரயில்; திருப்பூர் புறக்கணிப்பு

கோவை - பரூனி ரயில்; திருப்பூர் புறக்கணிப்பு

திருப்பூர்; கோவை - பரூனி சிறப்பு ரயில், கோவையில் புறப்பட்டு திருப்பூரில் நிற்காமல், ஈரோடு கடந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை - பரூனி சிறப்பு ரயில் (எண்: 03358) நாளை (20ம் தேதி) நள்ளிரவு, 12:50க்கு கோவையில் இருந்து புறப்படும்; வெள்ளி (22ம் தேதி) காலை, 6:00 மணிக்கு, பீஹார் மாநிலம், பரூனி சென்றடையும்.சிறப்பு ரயிலில், 11 படுக்கை வசதி, ஏழு முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும்.ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஸ்டேஷனில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை சிறப்பு ரயில் திருப்பூரில் நின்று சென்று வந்த நிலையில், திருப்பூரில் நிற்காது என்ற அறிவிப்பால், வடமாநில பயணிகள் கோவை அல்லது ஈரோடு சென்று ரயில் ஏற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ