காம்பேக்டிங் கட்டணம் உயர்வு
திருப்பூர்; தி நிட் காம்பேக்டர்ஸ் அசோசியேஷன் மகாசபை கூட்டம் நடைபெற்றது. இதில், காம்பேக்டிங் கட்டணம் நடைமுறையில் உள்ள ரேட்டிலிருந்து, 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. காம்பேக்டிங் பில் தொகையை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த கூலி உயர்வு, ஆக., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. எனவே, ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு, உற்பத்தியாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என, தி நிட் காம்பேக்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் துரைசாமி, செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் குணசேகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.