உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இழப்பீடு தாமதம்; அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு தாமதம்; அரசு பஸ் ஜப்தி

திருப்பூர்; பல்லடத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; விவசாயி. கடந்த 2017ல் அய்யம்பாளையம் பிரிவு அருகே மொபட்டில் வந்த இவர் மீது, அரசு பஸ் மோதியதில் பலியானார். இழப்பீடு கேட்டு அவரது குடும்பத்தினர், வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் முறையிட்டனர். கடந்த 2023, ஆக., மாதம் குடும்பத்தினருக்கு 6.90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டும், இழப்பீடு வழங்கப்படவில்லை. வக்கீல் பாலகுமார் மூலம் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பாலு உத்தரவிட்டார். நேற்று திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து, கோர்ட்டில் கொண்டு நிறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை