உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போட்டியா... தேர்வா? ஆசிரியர்கள் திணறல்

போட்டியா... தேர்வா? ஆசிரியர்கள் திணறல்

திருப்பூர்; அரசுப்பள்ளிகளில், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்களின் தனித்திறன் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. தற்போது, குடியரசு தின விழா மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. கலைத்திருவிழா போட்டியும் துவங்க உள்ளது. அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'அடுத்த மாதம் காலாண்டு தேர்வு; அடுத்தடுத்த விளையாட்டு போட்டி மற்றும் கலைத்திருவிழா போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களை, போட்டிகளில் பங்கேற்க பயிற்சி அளிப்பதா, தேர்வுக்கு தயார்படுத்துவதா என, வகுப்பு ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை