உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரிலும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார்

திருப்பூரிலும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில், 17.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணிக்கு மேல்நிலைத் தொட்டியின் உச்சியில் சிலர் அமர்ந்திருந்தனர். பொதுமக்கள் சிலர், திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசாரும் அப்பகுதிக்கு சென்று மேல்நிலைத் தொட்டி வளாகத்திலிருந்த நபர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விட்டதாக அப்பகுதியினர் மத்தியில் தகவல் பரவியது. இதனால், நேற்று காலை, பொதுமக்கள் திரண்டனர். மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு தலைவர் கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர் கோபால்சாமி ஆகியோர், மேல்நிலைத் தொட்டி வளாகத்தை பார்வையிட்டனர்.இருப்பினும் மக்கள் மத்தியில் சந்தேகம் நீடித்ததால், தொட்டியிலிருந்த குடிநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, மீண்டும் நிரப்பப்பட்டது. அந்த குடிநீரை, மண்டல தலைவர் மற்றும் கவுன்சிலர் பொதுமக்கள் முன்னிலையில், பருகி, குடிநீரில் மலம் கலக்கவில்லை என்று உறுதிப்படுத்தினர். அதன்பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை