மேலும் செய்திகள்
காலாண்டு தேர்வுகள் பள்ளிகளில் துவக்கம்
20-Sep-2024
திருப்பூர் : ஆறு முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை பயிலும் மாணவருக்கு காலாண்டு தேர்வு இன்று நிறைவு பெறுகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 19ம் தேதி முதல் காலாண்டு தேர்வு துவங்கியது. அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும் இன்றுடன் முடிவடைகிறது.நாளை (28ம் தேதி) முதல் அக்., 2 வரை ஐந்து நாட்கள் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அக்., 3 மற்றும் 4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு (5 மற்றும், 6ம் தேதி) விடுமுறையுடன் சேர்த்து, பள்ளி விடுமுறை நாட்கள், ஒன்பதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தரப்பில் இருந்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று காலாண்டு தேர்வுகள் முடிந்து, நாளை முதல் விடுமுறை துவங்கிறது; அக்., 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
20-Sep-2024