கும்பாபிேஷக ஆண்டு விழா
திருப்பூர் : கொடுவாய், அலமேலுமங்கா நாச்சியார் சமேத ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் கடந்தாண்டு நடைபெற்றது.இதன் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அருள் பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஆண்டு விழா நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.