உள்ளூர் செய்திகள்

மா.கம்யூ., கண்டனம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மா.கம்யூ., செயலாளர் மூர்த்தி அறிக்கை:மனித கழிவுகளை மனிதர்கள் அகற்ற தடை உள்ள நிலையிலும், கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதும், இதில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. திருப்பூரில் தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட அரசு துறைகளின் கண்காணிப்பு இல்லாததை திருப்பூரில் நடக்கும் சம்பவங்கள் வெளிப்படுத்துகிறது.சின்னக்கரை தனியார் சாய ஆலை செப்டிக் டேங்கில், உரிய உபகரணங்கள் இன்றி, பாதுகாப்பில்லாத நிலையில், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி; குழந்தைகளுக்கு உரிய கல்வி உறுதிப்படுத்த வேண்டும், என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை