உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழைய பஸ் ஸ்டாண்டில் நெரிசல்; ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு

பழைய பஸ் ஸ்டாண்டில் நெரிசல்; ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு

உடுமலை; பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நிலவும் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண துறைகளை ஒருங்கிணைத்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் நெரிசலை குறைக்க சென்டர்மீடியன் அமைக்கப்பட்டது; தளி ரோடு பிரியும் இடத்தில், தானியங்கி சிக்னலும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.சென்டர்மீடியன் முடியும் இடத்தில், தாராபுரம் மாநில நெடுஞ்சாலை இணைகிறது; இந்த சந்திப்பு பகுதியில், தாராபுரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் இணையும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த நெரிசலால், தேசிய நெடுஞ்சாலையில் வெகுதொலைவு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. அருகிலேயே பஸ் ஸ்டாப்பும் இருப்பதால், நெரிசல் கூடுதலாகிறது.இப்பிரச்னைக்கு தீர்வாக அவ்விடத்தில் ரவுண்டானா அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதன்பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.நகரின் முக்கிய பகுதியில் நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, போக்குவரத்து போலீசாரை ஒருங்கிணைத்து, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை