பழநி பஸ் பிரேக் டவுன் பஸ் ஸ்டாண்டில் நெரிசல்
உடுமலை; பஸ் ஸ்டாண்டில், பழநி பஸ் மக்கராகி நின்றதால், பிற பஸ்கள் செல்ல வழி இல்லாமல், பல மணி நேரம் நெரிசல் நிலவியது.உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில், 5 நுழைவாயில்கள் வாயிலாக பஸ்கள் உள்ளே வந்து, திரும்பி செல்கின்றன. இதில், பழநி வழித்தட பஸ்கள் நிறுத்தும் இடத்தில், போதிய இடவசதியில்லை. வரிசையாக பஸ்களை நிறுத்தி பயணியரை ஏற்றிச்செல்கின்றனர்.நேற்று காலை, 8:00 மணிக்கு கோவையில் இருந்து உடுமலை வழியாக பழநி சென்ற அரசு பஸ் பழுதாகி நின்றது. இதனால், அவ்வழியாக பிற பஸ்கள் செல்ல முடியவில்லை. ஏற்கனவே நெரிசலில் உள்ள பிற நுழைவாயில்கள் வாயிலாக பழநி பஸ்கள் திரும்பி சென்றன. இதனால், பஸ் ஸ்டாண்டில் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நெரிசல் நிலவியது.