மேலும் செய்திகள்
52 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்
25-Jan-2025
திருப்பூர்; பழநி கோவில் அறங்காவலர் குழு தலைவராக தேர்வாகியுள்ள சுப்பிரமணியனுக்கு, வடக்கு ரோட்டரி நிர்வாகிகள் நேற்று வாழ்த்து தெரிவித்தனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலராக பணியாற்றி வந்தார். இரண்டாவது முறையாக, அறங்காவலராக தேர்வு செய்யப்பட்ட அவர், குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவ்வகையில், அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற சுப்பிரமணியனுக்கு, பல்வேறு அமைப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அதன்படி, திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், சுப்பிரமணியனை சந்தித்து, பொன்னாடை மற்றும் மலர்மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
25-Jan-2025