உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  காங்கயம் காளை சிலை அமைக்கும் பணி துவக்கம்

 காங்கயம் காளை சிலை அமைக்கும் பணி துவக்கம்

காங்கயம்: காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காங்கயம் காளை சிலை அமைக்கும் பணியின் துவக்க விழா நடந்தது. திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காங்கயம் காளை சிலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன் மற்றும் ஈரோடுஎம்.பி. பிரகாஷ் முன்னி லையில் சிலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. காளை சிலை அமைக்கும் பணி, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து பணி துவங்கப்பட்டது. 11 அடி உயரம், 12 அடி நீளம், 3.25 அடி அகலமும் கொண்ட வெங்கல சிலை அமைக்கப்படுகிறது. விழாவில், காளை சிலை அமைப்பு சங்க தலைவர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை