உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூட்டுறவு பணியாளர் தேர்வு 29 வரை விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு பணியாளர் தேர்வு 29 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்: கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மாவட்டம் வாரியாக மொத்தம் 2,513 காலிப்பணியிடங்கள் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், 102 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 29ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கி பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. இலவச பயிற்சியில் பங்கேற்க https://forms.gle/VJgjWqBNTvHy6MYN7 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ