விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 252.69க்கு விற்பனை
உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேசிய வேளாண் சந்தை ( இ-நாம்) திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்றுமுன்தினம் நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து, 12 விவசாயிகள், 98 மூட்டைகள் கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த மறைமுக ஏலத்தில், ஆறு நிறுவனங்கள் பங்கேற்றன. முதல் தரம், ஒரு கிலோ ரூ. 238 முதல், ரூ. 252.69 வரையும், இரண்டாம் தரம், ரூ.145 முதல், ரூ. 230.17 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ''உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடக்கும் இ-நாம் திட்ட ஏலத்தில், கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கிறது. மேலும் விபரங்களுக்கு 94439 62834 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என்றனர்.