உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, ராவணாபுரம், புக்குளம், சீலக்காம்பட்டி, சிஞ்சுவாடி, கோட்டமங்கலம், விளாமரத்துப்பட்டி, குறிச்சிக்கோட்டை, கணபதிபாளையம், கொடிங்கியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 28 விவசாயிகள், 57 மூட்டை அளவுள்ள, 2,850 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இ-நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், 9 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.முதல் தரம், ரூ. 158.21 முதல், ரூ. 170.10 வரையும், இரண்டாம் தரம், ரூ. 131.21 முதல், 152.16 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது என, திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ