விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்
உடுமலை; மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்தது. மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. 570 கிலோ எடையுள்ள, 2,500 தேங்காய்களை, 10 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏழு வியாபாரிகள் பங்கேற்று, ஒரு கிலோ அதிகபட்சமாக, ரூ.51க்கும், குறைந்த பட்சமாக, ரூ. 47 க்கும் ஏலம் எடுத்தனர். சராசரி விலையாக, ரூ.50 காணப்பட்டது. இதன் மதிப்பு, ரூ. 28 ஆயிரத்து, 343 ஆகும். அதே போல், கொப்பரை ஏலத்திற்கு, 13 விவசாயிகள், 25 மூட்டை அளவுள்ள, 946 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதிகபட்சமாக, ரூ.192க்கும், குறைந்த பட்சமாக, ரூ.141 என, சராசரியாக ஒரு கிலோ ரூ.180க்கு இ-நாம் திட்டத்தில், ஏழு வியாபாரிகள் பங்கேற்று கொள்முதல் செய்தனர். இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 58 ஆயிரத்து, 6 ரூபாயாகும்.