உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொப்பரை விலை உயர்வு

கொப்பரை விலை உயர்வு

பொங்கலுார்; திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான விவசாயிகள் தென்னையை நம்பியே உள்ளனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக நோய் பாதிப்பு அதிகரித்தது. இதனால் தேங்காய் விளைச்சல் சரிந்தது. தேங்காய்க்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக ஒரு மாதம் முன்பு கொப்பரை கிலோ, 270 ரூபாய் வரை விலை போனது. தோப்புகளில் தேங்காய், 40 ரூபாய் வரை விலை போனது. வட மாநிலங்களில் பலத்த மழை பெய்வதால் போக்குவரத்தில் ஏற்பட்ட சிரமம், அதிகப்படியான விலை போன்ற காரணங்களால் கொப்பரை விற்பனை மந்தமடைந்து விலை சரிந்தது. திடீரென விலை சரிந்ததால் தேங்காய் விலை ஏழு ரூபாய் சரிந்தது. கொப்பரை கிலோ, 210 ரூபாய் வரை சரிந்தது. இதனால் விவசாயிகள் தேங்காய் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது கொப்பரை கிலோவுக்கு, 18 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி