உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை... சாக்கடை... தெருவிளக்கு... குப்பை பிரச்னைகளை அடுக்கிய கவுன்சிலர்கள்

சாலை... சாக்கடை... தெருவிளக்கு... குப்பை பிரச்னைகளை அடுக்கிய கவுன்சிலர்கள்

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டல கூட்டம், அதன் தலைவர் கோவிந்தராஜ், தலைமையில் நேற்று நடந்தது. உதவி கமிஷனர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பேசியதாவது: ராஜேந்திரன் (இ.கம்யூ.,): வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வாங்க வேண்டும். குடிநீர் விநியோகத்தை எந்த அதிகாரியும் கண்டு கொள்வதில்லை. பல இடங்களில் லீக்கேஜ் உள்ளது. செழியன் (த.மா.கா.,): குப்பை எடுக்க ஆட்டோ தாமதமாக வருகிறது. இதனால், பல இடங்களில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. வேலம்மாள் (தி.மு.க.,): தெரு விளக்கு சரியாக எரிவதில்லை. காலையில் எரிகிறது. இரவு நேரத்தில் எரிவதில்லை. கவிதா (அ.தி.மு.க.,): தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், மக்கள் நடமாட முடிவதில்லை. வாகனத்தில் செல்வோரை துரத்தி கடிக்க பாய்கிறது. எனவே, நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். புஷ்பலதா (அ.தி.மு.க.,): எனது வார்டில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. ரோடு போட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்றுவரை பணி துவங்கவில்லை. உடனடியாக ரோடு போட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடை கால்வாய்களை துார்வார வேண்டும். முத்துசாமி (அ.தி.மு.க.,): சாக்கடை கால்வாய் துார்வார ஆட்கள் வருவதில்லை. குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும். மண்டல தலைவர் : மண்டல வார்டு பகுதிகளில் உள்ள மண் ரோடுகள் அனைத்தையும் தார் சாலைகளாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தார் சாலை போடும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சியுன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில், சாக்கடை கால்வாய் இல்லாத இடங்களில் சாக்கடை கால்வாய் கட்ட ஒன்று மற்றும் 2வது வார்டில், 1.98 கோடி ரூபாய், ஆறு மற்றும் 18வது வார்டில், 11.37 கோடி, ஏழு மற்றும் 8வது வார்டில், 8.98 கோடி ரூபாய், என மொத்தம், 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மக்களின், 40 ஆண்டுகால பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. --- திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டல கூட்டத்தில், மொத்தம் 15 கவுன்சிலர்களில் 8 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர். கவுன்சிலர்கள் வராததால் இருக்கைகள் காலியாக உள்ளன. -- பங்கேற்காத 7 கவுன்சிலர்கள் திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலத்தில் நடக்கும் கூட்டங்களில், பங்கேற்க கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நேற்று நடந்த கூட்டத்தில், மொத்த கவுன்சிலர்கள், 15 பேரில் எட்டு பேர் மட்டுமே பங்கேற்றனர். இதனால் இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று நடந்த கூட்டத்தில், தமிழ்ச்செல்வி (16வது வார்டு, தாமோதரன் (18வது வார்டு), கோபால்சாமி (6வது வார்டு), இந்திராணி (5வது வார்டு), மாலதி (2வது வார்டு), லோகநாயகி (3வது வார்டு) என ஆறு கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. 20வது வார்டு கவுன்சிலர் குமார், கூட்டம் முடிந்த பின்னரே வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை