மகளிர் இன்ஸ்பெக்டருக்கு கோர்ட் பிடிவாரன்ட்
திருப்பூர்; 'போக்சோ' வழக்கில் ஆஜராகாத மகளிர் இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட இளம் சிறார் நீதிக்குழுமத்தினர் 'பிடிவாரண்ட்' பிறப்பித்துள்ளனர்.பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், 16 வயது சிறுமிக்கு, 17 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக 'போக்சோ' வழக்கு பதியப்பட்டு, சிறுவன் கைது செய்யப்பட்டார்.இவ்வழக்கு விசாரணை, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட இளம் சிறார் நீதிக்குழுமத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு நடக்கிறது. இதுபோன்ற வழக்குகளை, ஆறு மாதத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான பல்லடம் மகளிர் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் விசாரணை நடத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.ஆனால், நேற்று வழக்கின் அதிகாரியான அவர் ஆஜராகவில்லை. எனவே, அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து இளம் சிறார் நீதிக்குழுமம் முதன்மை நடுவர் செந்தில்ராஜா, சட்ட உறுப்பினர்கள் முருகேசன், மல்லிகா ஆகியோர் உத்தரவிட்டனர்.