உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எருமையிடம் மனு மா.கம்யூ. போராட்டம்

எருமையிடம் மனு மா.கம்யூ. போராட்டம்

அவிநாசி அருகே முருகம்பாளையத்தில் சாலை சீரமைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத அதிகாரிகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகம்பாளையம் பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து பலமுறை மனு அளித்தும், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி இப்போராட்டம் நடந்தது. கிளைச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேலுசாமி, ராஜன், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எருமையிடம் மனு அளித்த மா.கம்யூ. கட்சியினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை