உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயிர் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கம்: செயல்விளக்க கண்காட்சி நடந்தது

பயிர் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கம்: செயல்விளக்க கண்காட்சி நடந்தது

உடுமலை: மடத்துக்குளம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. மடத்துக்குளம், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க அலுவலக வளாகத்தில், விவசாயிகளுக்கு வட்டார அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் வசந்தா தலைமை வகித்தார். மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் மண் வள மேலாண்மை, மண் பரிசோதனை குறித்து, வாகரை மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த பேராசிரியர் சதீஷ்குமார் விளக்கினார். தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து ஓய்வு பெற்ற துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், மக்காச்சோள சாகுபடியில் உர மேலாண்மை குறித்து, ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் மகாலிங்கம் ஆகியோர் பேசினர். தோட்டக்கலை துறை சார்ந்த மானிய திட்டங்கள், பயிர் சாகுபடி குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் உமாசங்கரி, கால்நடை பராமரிப்பு குறித்தும், துறை சார்ந்த திட்டங்கள், கோமாரி நோய் விழிப்புணர்வு முகாம் குறித்து டாக்டர் ஹரி பிரசாத் ஆகியோர் பேசினர். ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மேரி ஹில்டா, விற்பனை கூட செயல்பாடுகள், வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்தல், இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை, தேங்காய் உள்ளிட்ட விவசாய விளை பொருட்கள் ஏலம், கூடுதல் விலை கிடைப்பது உள்ளிட்ட பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். மக்காச்சோள ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை உள்ளிட்ட பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த செயல்விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் அஷ்ரப் அலி, உதவி தொழில்நுட்ப மேலாளர் பார்த்திபன், ஜோஷிகா ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை