உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மகுடம் சூடும் மங்கை விருது வழங்கும் விழா

 மகுடம் சூடும் மங்கை விருது வழங்கும் விழா

உடுமலை: உடுமலை தமிழிசைச்சங்கம் மற்றும் 'விவிடிஎன் டெக்னாலஜிஸ்' சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும், 29 பேருக்கு, விருது வழங்கும் விழா, ஜி.வி.ஜி., கலையரங்கில் நடந்தது. தமிழிசைச்சங்க தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி தலைமை வகித்தார். செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் ஜெயப்பிரகாஷ், அறக்கட்டளை உறுப்பினர் அருண்கார்த்திக், கவுரவ ஆலோசகர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, கரூர் எம்.பி., ஜோதிமணி, மகுடம் சூடும் மங்கை விருது குழு தலைவர் நந்தினி, 'விவிடிஎன்' இயக்குனர்கள் நீத்து தலால், ப்ரீத்தி குப்தா, ஷாலினி பன்சால், டெக் மகிந்திரா இயக்குனர் சுஜிதா அரவிந்த் உள்ளிட்டோர், சாதனை மகளிருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர். தொடர்ந்து, தெக்கின்காடு ஆட்டம் கலாசமிதி குழுவினரின், இசை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி