உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வயலில் இறங்கி நாற்று நட்ட குட்டீஸ் பிஞ்சு மனதில் பசுமை விதைக்க முயற்சி

வயலில் இறங்கி நாற்று நட்ட குட்டீஸ் பிஞ்சு மனதில் பசுமை விதைக்க முயற்சி

'இளமையில் கல்' என்கிறது, ஆத்திச்சூடி. அதுவும், பிஞ்சு மனதில் ஆழப் பதியும் விஷயங்கள், அவர்களின் வளரிளம் பருவத்துக்கும், அதை தாண்டிய வாழ்க்கை பயணத்துக்கு, அஸ்திவாரமாக அமைந்துவிடும்.அந்த அடிப்படையில், வெள்ளகோவில் ஒன்றியம், சிலம்பகவுண்டன் வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு, ஏட்டுக்கல்வியுடன் வாழ்க்கை கல்வியும் கற்பிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, உழவின் முக்கியத்துவம், உழவர்களின் வாழ்க்கை சூழலை, பள்ளிக்குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், வயலில் இறங்கி நாற்று நடும் பயிற்சியை வழங்கினர்.பள்ளி தலைமையாசிரியர் பிரபாகர் முயற்சியில், பள்ளி மேலாண்மைக்குழுவினர் மற்றும் பெற்றோர் உதவியுடன், அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள வயலில் இறங்கி, பள்ளிக் குழந்தைகளுக்கு நாற்று நடவு கற்றுக் கொடுத்தனர். குழந்தைகளும் உற்சாக துள்ளலுடன் நீர் சூழ்ந்த வயலில் இறங்கி நாற்று நடவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி