மேலும் செய்திகள்
அனுமதியின்றி போஸ்டர்; அபராதம் விதித்த மாநகராட்சி
27-Sep-2025
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 16வது வார்டு சொர்ணபுரி லே-அவுட், 5வது வீதியில், தனிநபர் ஒருவர் தனது வீட்டுக்கு குழாய் பதிப்பு பணிக்காக மாநகராட்சி ரோட்டை சேதப்படுத்தியது தெரிந்தது. மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். அதில், அன்பழகன் என்பவர் வீட்டுக்கு குழாய் பதிப்பு பணிக்கு 77 மீ., நீளத்துக்கு குழி தோண்டி, ரோடு சேதப்படுத்தியது தெரிந்தது. உரிய அனுமதியும் இன்றி, கட்டணம் எதுவும் செலுத்தாமல் குழி தோண்டியது தெரிந்தது. மாநகராட்சி விதிகளின்படி, 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றியும், உரிய கட்டணம் செலுத்தாமலும், ரோட்டை சேதப்படுத்துவோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
27-Sep-2025