உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தலைக்கு மேல் ஆபத்து; அதிகாரிகள் அலட்சியம்

தலைக்கு மேல் ஆபத்து; அதிகாரிகள் அலட்சியம்

பல்லடம்; திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், மாவட்ட எஸ்.பி.,க்கு அனுப்பியுள்ள மனு: நேற்று முன்தினம், பல்லடம் நால்ரோடு சிக்னல் பகுதியில் இருந்த சிக்னல் கம்பம் திடீரென விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. சிக்னல் கம்பங்களில், விதிமுறை மீறி, அந்தரத்தில் தொங்க விடப்படும் விளம்பரப் பலகைகளால், இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. உயிர் சேதம் ஏற்படும் முன் அவற்றை அகற்ற வேண்டும் என, தொடர்ந்து, 56 புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. இச்சூழலில்தான், பல்லடம் நால்ரோடு சிக்னலில், விளம்பரப் பலகையுடன் வைக்கப்பட்டிருந்த சிக்னல் கம்பம் கீழே விழுந்தது. எனவே, எதிர்வரும் நாட்களில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில், தாலுகா முழுவதும் ஆய்வு மேற்கொண்டு, விதிமுறை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி