உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழில் பெயர்ப்பலகை மே 15 வரை அவகாசம்

தமிழில் பெயர்ப்பலகை மே 15 வரை அவகாசம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் அனைத்துவகை தொழிற்சாலைகளிலும் தமிழை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைப்பது தொடர்பாக, கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.மாவட்ட அளவிலான இந்த குழுவின் முதல் கூட்டம், கலெக்டர் கிறிஸ்து ராஜ் தலைமையில் நடந்தது. ''மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.வரும் மே 15ம் தேதிக்குள், நுாறு சதவீதம் தமிழில் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். காலக்கெடுவுக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்'' என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ