உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டிசெட் வாலிபால் போட்டி 23, 24ம் தேதி நடக்கிறது

டிசெட் வாலிபால் போட்டி 23, 24ம் தேதி நடக்கிறது

திருப்பூர்; திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் (டிசெட்) சார்பில் பள்ளி அணிகளுக்கு இடையேயான, 29வது திருப்பூர் நிட்சிட்டி வாலிபால் போட்டி, 23 மற்றும் 24ம் தேதிகளில் நடக்கிறது.பதினாறு மற்றும், 18 வயது பிரிவில், திருப்பூர் வட்டாரத்தை சேர்ந்த, மொத்தம், 32 பள்ளி அணிகள் போட்டியில் பங்கேற்க பதிவு செய்துள்ளன. லீக், நாக்அவுட், காலிறுதி, அரையிறுதி அடிப்படையில் போட்டிகள் நடக்கிறது.சீனியர் மாணவர் பிரிவில், 24 அணிகளும், சூப்பர் சீனியர் மாணவர் பிரிவில், 15 அணிகளும் பங்கேற்கின்றன. மாணவியர், சீனியர் பிரிவில், 14 அணிகளும், சூப்பர் சீனியர் பிரிவில், ஏழு அணிகளும் பங்கேற்று விளையாடுகின்றன. வெற்றி பெறும் அணிக்கு, சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ