உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையோர கடைகளை முறைப்படுத்த முடிவு

சாலையோர கடைகளை முறைப்படுத்த முடிவு

அவிநாசி ; அவிநாசியில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக சாலையோர கடைகள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக, வர்த்தகர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.நிரந்தரமாக கடைகள் வைத்து வாடகை, பல்வேறு வரிகள், மின்சார கட்டணம், ஊழியர்களுக்கு சம்பளம் ஆகியவை என பல வகையில் வணிகர்களும், வியாபாரிகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக கூறி, பல போராட்டங்களை வர்த்தகர்கள் முன்னெடுத்தனர்.கடந்த மாதம் தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், தீபாவளிக்கு முன் சாலையோர கடைகளை முறைப்படுத்தி தருவதாக தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோர் வாக்குறுதி அளித்திருந்தனர்.ஆனால், அதனை நிறைவேற்றாததால், வரிகொடா இயக்கம் நடத்துவது என முடிவு செய்தனர். கடையடைப்பு, போராட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றினர். நேற்று காலை அவிநாசி அனைத்து வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதிய பஸ் நிலையம் எதிரில் உண்ணாவிரதம் இருக்க துவங்கினர்.தகவலறிந்த வந்த டி.எஸ்.பி., சிவகுமார் போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தினர். அதனை தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், டி.எஸ்.பி., சிவகுமார், அனைத்து வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சாலையோர கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை, தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினர் சாலையோர கடைகளை முறைப்படுத்த தகுதியான நபர்களை தேர்வு செய்யவும், ஒரு வார காலத்தில் கடைகளை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி