உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: அடிப்படை வசதிகளை செய்து தரக்கேட்டு, குண்டடத்தில், துளசி நகர் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தாராபுரம் அருகே குண்டடம் ஒன்றியம், நந்தவனம்பாளையம் கிராமம் வெறுவேடம்பாளையம் துளசி நகரில் 10 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி இல்லை. இதனால், அவற்றை ஏற்பாடு செய்து தரும்படி குண்டடம் ஆதித்தமிழர் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு துளசி நகர் மக்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !