உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அட்சதை பெற்ற பக்தர்கள்

அட்சதை பெற்ற பக்தர்கள்

பல்லடம்;நேற்று, பல்லடம் அருகே, வடுகபாளையம் பஜனை மடத்தில், அயோத்தி ராமர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கலச தீர்த்தம் வைத்து பூஜிக்கப்பட்டது. ராமர் பஜனை குழுவினர், பக்தர்கள், பொதுமக்கள் கலச தீர்த்தத்திற்கு மலர் துாவி திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபாடு செய்தனர்.தொடர்ந்து, கலச தீர்த்தம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மாகாளியம்மன் துர்க்கையம்மன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு, துர்க்கை அம்மன் சன்னதியில் வைத்து சிறப்பு அர்ச்சனைகள் நடந்தன. இதையடுத்து, பூஜிக்கப்பட்ட தீர்த்தம், அட்சதை, அயோத்தி ராமர் கோவில் புகைப்படம் ஆகியவை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. சிறப்பு பூஜைக்கு பின், பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை