உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுக்ரீஸ்வரர் கோவிலுக்கு சீர்வரிசையுடன் வந்த பக்தர்கள்

சுக்ரீஸ்வரர் கோவிலுக்கு சீர்வரிசையுடன் வந்த பக்தர்கள்

திருப்பூர், ; சுக்ரீஸ்வரர் கோவிலில் நடந்த, ஆருத்ரா அபிேஷகம் மற்றும் திருக்கல்யாண உற்சவத்துக்காக, 500க்கும் அதிகமான சீர்வரிசை தட்டு களுடன் வந்து பக்தர்கள் வழிபட்டனர்.எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன.நேற்று முன்தினம், முகுந்தபுரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று, வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, திருக்கல்யாண உற்சவத்துக்கு சீர்தட்டு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், லட்டு, அதிரசம், ஜாங்கிரி, பூந்தி, மிட்டாய் வகை, தேன்குழல், முறுக்கு, பட்டு சேலை, பட்டு வேட்டி என, பல்வேறு வகை பொருட்களுடன், 500 தட்டுகளை எடுத்துவந்தனர். முன்னதாக, கோவில் வளாகத்தில், நடராஜர் - சிவகாமசுந்தரி அம்மனுக்கு மகாஅபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரபூஜையும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.ஆவுடைநாயகி அம்மன், மதுரை மீனாட்சி அலங்காரத்துடன் அருள்பாலித்தார். திருமாங்கல்ய நோன்பு நாளான நேற்று, பக்தர்கள் தம்பதி சமேதராக பங்கேற்று,வழிபட்டனர்.ஆருத்ரா அன்னதான குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை