பஞ்சலிங்க அருவிக்கு பக்தர்கள் செல்ல தடை
உடுமலை : உடுமலை திருமூர்த்திமலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில், நேற்று அதிகாலை முதல், கனமழை பெய்து வருகிறது.மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி, பக்தர்கள், சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டு, வழித்தடம் அடைக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனால், பக்தர்கள், சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். மலையடிவாரத்தில், தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையிலும், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.