உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு புகார்

மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு புகார்

திருப்பூர்: திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன், கலெக்டரிடம் அளித்த மனு: திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை வீடுதேடிச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ரைட்ஸ் திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களில் பலர் கணக்கெடுப்புக்காக வீடுகளுக்கு நேரில் செல்வதில்லை. ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்களில் அமர்ந்துகொண்டு, மொபைல் போனில் தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிகளை தங்கள் இடத்துக்கு வரவழைக்கின்றனர். இதனால் கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மிகுந்த அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். எனவே, விதிமுறைகளை மீறும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களின் உடல்நிலை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அரசு நலத்திட்ட உதவிகளை வீடுதேடிச் சென்று வழங்குவதே இக்கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும். எனவே, கணக்கெடுப்பு பணிகளை முறையாகவும், திறம்படவும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை