உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் கடையில் நடைமுறைக்கு வராத டிஜிட்டல் பரிவர்த்தனை

ரேஷன் கடையில் நடைமுறைக்கு வராத டிஜிட்டல் பரிவர்த்தனை

பல்லடம் : ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது அறிவிப்புடன் நின்றது.குக்கிராமங்களில் துவங்கி, பிளாட்பாரக் கடைகள் முதற்கொண்டு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் எளிதாகிவிட்டன.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், 'க்யூ ஆர் கோடு' முறையைப் பின்பற்றி பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் என, கடந்த, 2023ம் ஆண்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் சில கடைகளில் மட்டும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை கொண்டுவரப்பட்டது.இது, முழுமையாக கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓராண்டுக்கு மேல் ஆகியும், வெறும் அறிவிப்போடு நின்று போனது.இன்று, பொதுமக்களின் அன்றாட செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை பின்பற்றியே நடந்து வருகிறது. ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை கொண்டுவரப்படாததால், பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு சில்லறை பிரச்னை மற்றும் காலதாமதமும் ஏற்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sarashan
மே 01, 2025 12:38

ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொண்டால், ஒருவர் வாங்காத பொருட்களை வாங்கியதாகக் கணக்கு காண்பிக்க இயலாது. அதாவது, ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு, மற்ற பொருட்களை வாங்காமல் விட்டுவிடும்பட்சத்தில், அந்த சம்பந்தப்பட்டவரின் கடை விற்பனையாளர், வாங்கிய பொருட்களுக்கு மட்டும் பணம் வாங்கிக்கொண்டு, சம்பந்தப்பட்டவர் கேட்ட பொருட்களை மட்டும் கொடுத்துவிட்டு, அவருக்கு உரிமையான வாங்காத பொருட்களை சம்பந்தப்பட்டவரே வாங்கியதாகக் கணக்குக் காண்பித்து அதை வெளியில் விற்று அதிக லாபம் பெற வசதி போய்விடும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்டவரின் எண்ணுக்கு வரும் SMS ஐப் பார்த்தால் புரியும் - வாங்காத பொருட்களுக்கும் சேர்த்து குறுஞ்செய்தி வரும் இது டிஜிட்டல் பரிவர்த்தனையில் செய்ய இயலாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை